குழம்பு வகைகளை எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் சில சமயங்களில் சில புதுமைகளைப் புகுத்திப் பாருங்கள். இட்லி, தோசைகளுக்கு வைக்கும் சில வகை குழம்புகளில் வெங்காயம், தக்காளியை வதக்கிப் போடாமல் சிறிது அரைத்து சேருங்கள். குழம்பு ருசியாகவும், தொக்காகவும் இருக்கும்.
சைவ மற்றும் அசைவ குழம்பு வகைகளை செய்யும்போது அதன் ருசியை அதிகரிக்க வேண்டுமானால், சிறிதளவு பார்லி பவுடரை சேர்க்கலாம்.
குழம்பில் அதிகமாக உப்பை சேர்த்துவிட்டேனே என்ற கவலை இனி வேண்டாம். அந்தக் குழம்பில் ஒரு பச்சை உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி குழம்பில் போட்டு 15 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். அந்த உருளைக்கிழங்குகள் உப்பை எடுத்துவிடும். அந்த உருளைக்கிழங்குகளை பரிமாறும்போது நீக்கிவிடலாம்.
வெங்காயமும் பூண்டும் சேர்க்கப்படாத குருமாக்கள், குழம்புகள், பருப்புகள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.

No comments:
Post a Comment