Monday, 3 February 2014

பழக்கவழக்கத்தை மாற்றுங்கள்

முகம் பொலிவு பெற வேண்டும் என்று சருமத்திற்கு எவ்வளவோ செய்வார்கள். ஆனால் சில பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டியது அவசியமாகிறது.அதாவது வேக வேகமாக நடப்பதைவிட சற்று மெதுவாக நிதானமாக நடக்க முயலுங்கள். முகத்தை எப்போதும் மலர்ச்சியாக வைத்திருக்க அவ்வப்போது புன்முறவலை உதிருங்கள்.

அவ்வப்போது மிக மகிழ்ச்சியான, மனநிறைவான நினைவுகளை பத்து நிமிடங்கள் மனதிலே கொண்டு வந்து நினைத்து மகிழுங்கள். இதனால் மனம் இளகுவாகும்.எப்போதும் ஓயாமல் பேசுவதைவிட  குறைவாகப் பேசுங்கள். இனிமையாகப பேசுங்கள். கத்துவதை முற்றிலுமாகத்  தவிர்க்கவும்.

உங்களுக்காகத் தினமும் 30  நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த முப்பது  நிமிடங்களுக்குள் மற்றவர்களை நுழைய  விடாதீர்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு  மிகவும் பிடித்த, படிப்பது, பாடல் கேட்பது,  உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில்  ஈடுபடுங்கள்.

No comments:

Post a Comment