Tuesday, 25 March 2014

இதெ‌ல்லா‌ம் செ‌ய்து பாரு‌ங்க‌ள்

அரிசி, பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊற வைத்து சமைத்தால் நேரமும், எ‌ரிவாயு செலவும் மிச்சம்.  காய்கறிகளை குக்கரில் வைத்துக் குறைவாகத் தண்ணீர் விட்டு, ஒரு விசில் வைத்தெடுத்து ‌பிறகு எ‌ப்போது‌ம் போல சமைத்தால் காய்களின் நிறமும் மாறாது. நேரமும், எ‌ரிபொருளு‌ம் மிச்சம்.

இட்லி செய்கிற போது குறைவான தீயிலேயே வேக விட்டால் தண்ணீர் சீக்கிரம் வற்றாமல், இட்லியும் சீராக வேகும்.

புழுங்கலரிசியாக இருந்தால், அரை வேக்காடு வெந்ததும், இரும்பு பக்கெட்டில் வைக்கோல் வெட்டிப் போட்டுப் பரப்பி, அதனுள் சோற்றுப் பானையைத் தூக்கி வைத்து மூடிவிடவும். சாப்பிடுவதற்கு முன்பாக வடித்துவிட்டுப் பரிமாறலாம்.

அடுப்பின் தீ சுவாலை எப்போதும் நீல நிறத்தில் தான் இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் எரிகிறது என்றால் கேஸ் வீணாகிறது என்றோ, அடைப்பு இருக்கிறது என்றோ அர்த்தம்.

சமையலுக்குத் தேவையான எல்லா வற்றையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு சமைப்பது மிக முக்கியம்.








No comments:

Post a Comment