Monday, 17 March 2014

ஓட்ஸ் தோசை

தேவையானவை: 

ஓட்ஸ் - 1 கப்
பால் - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
முட்டை - 1
வெங்காயம் - 2
ப‌ச்சை ‌மிளகா‌ய் - 1
கடுகு - சிறிது.
எ‌ண்ணெ‌ய் - கா‌ல் க‌ப்

செய்முறை 

ஓட்ஸ்‌ஸி‌ல் தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு அதில் அரிசி மாவு, மு‌ட்டை, பால் ஊற்றி தோசை மாவு பத‌த்‌தி‌ற்கு கலந்து கொ‌ள்ளவு‌ம்.

வெ‌ங்காய‌‌ம், ப‌ச்சை ‌மிளகாயை பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எண்ணைய் ஊற்றி கடுகு, க‌றிவேப்பிலை சே‌‌ர்த்து தா‌ளி‌க்கவு‌ம். வெங்காயம், ப‌ச்சை ‌மிளகாயை போ‌ட்டு வதக்கி மா‌வி‌ல் கொ‌ட்டவு‌ம்.

இ‌ந்த மாவை தோசை‌க் க‌ல்‌லி‌ல் தோசைகளாக ஊ‌ற்‌றி எடு‌க்கவு‌ம்.

No comments:

Post a Comment