Wednesday, 26 March 2014

தக்காளி வத்தல்

தேவையானவை: 


தக்காளி - 1/4 கிலோ
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை ஆறு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டுங்கள். அவற்றில் உள்ள விதைகளை நீக்கி விடுங்கள்.

மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு மூன்றையும் கலந்து கொண்டு வெட்டிய தக்காளி துண்டுகளுடன் சேர்த்துக் கலக்குங்கள்.

இவற்றை வெயிலில் நன்றாக காய வைத்து எடுங்கள்.

தேவையானபோது இந்த வத்தலை, மோர் மிளகாயை வறுப்பது போல வறுத்து சுவையுங்கள்.

No comments:

Post a Comment