Wednesday 16 October 2013

பாக‌ற்கா‌ய் எ‌ண்ணெ‌ய் வறுவ‌ல்

தேவையானவை:

பாக‌ற்கா‌ய் - 2

‌மிளகா‌ய் பொடி - 2 தே‌க்கர‌ண்டி

ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - ‌சி‌றிது

எ‌ண்ணெ‌ய் - 3 தே‌க்கர‌ண்டி

அ‌ரி‌சி மாவு - கா‌ல் க‌ப்

உ‌ப்பு - ‌சி‌றிது

பு‌ளி‌த்த த‌யி‌ர் - கா‌ல் க‌ப்

பெரு‌ங்காய‌ப்பொடி - ‌சி‌றிது

செ‌ய்யு‌ம் முறை

பாக‌ற்காயை மெ‌ல்‌லிய ‌வி‌ல்லைகளாக நறு‌க்‌கி, ‌விதை ‌நீ‌க்‌கி ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் சே‌ர்‌த்து ‌சி‌றிது நேர‌ம் வேகவை‌த்து எடு‌க்கவு‌ம். வெ‌ந்த கா‌யி‌ல் த‌ண்‌ணீ‌ர் ‌மி‌ச்ச‌‌மிரு‌ந்தா‌ல் அதனை வடிக‌ட்டி‌விடவு‌ம்.

ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் த‌யிரை‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் உ‌ப்பு, ‌மிளகா‌ய் தூ‌ள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள், அ‌ரி‌சி மாவு, பெரு‌ங்காய‌ம் என அனை‌த்தையு‌ம் போ‌ட்டு ந‌ன்கு ‌கிள‌றி அ‌தி‌ல் பாக‌ற்காயை‌ப் போ‌ட்டு புர‌ட்டவு‌ம்.

இதனை 10 ‌நி‌மிட‌ம் ஊற ‌விடவு‌ம். ‌பிறகு ஒரு வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌‌ய் ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்தது‌ம் பாக‌ற்கா‌ய் கலவையை‌க் கொ‌ட்டி ந‌ன்கு வத‌க்‌கி, ‌சிவ‌ந்து வரு‌ம் போது இற‌க்‌கி‌‌க் கொ‌ள்ளவு‌ம்.

No comments:

Post a Comment