Friday 1 November 2013

பொலிவான முகத்துக்கு எளிதான குறிப்புகள்

ஆண், பெண் யாராக இருந்தாலும் தங்கள் முகம் பார்ப்பதற்குப் பொலிவாக, அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

வசதியானவர்கள் ப்யூட்டி பார்லர்க்குச் சென்று வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி தற்காலிக ஏற்பாடுகள் செய்வதுண்டு. ஆனால் நிரந்தரமாக உங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள, பராமரிக்க எளிமையான வழிகள் உள்ளன.

முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பின் தண்ணீர் விட்டு கழுவி வந்தால் முகத்தின் நிறம் மாற்றம் அடையும்.

தக்காளியை அரைத்துப் பூசி, நன்கு ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும். முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய வேப்பங்கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.

No comments:

Post a Comment