Wednesday 13 November 2013

கோடைகால குறிப்புகள்

இந்த‌க் கோடைக்காலத்தில் உடல் நலத்தையும், அழகையும் பேணுவதற்கு என்று தனிக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களது அழகை பராமரிக்க எளிதான வழிமுறைகள் பல உள்ளன. அவற்றில் சில குறிப்புகளை உங்களுக்காக.

வெள்ளரித் துண்டுகளை தயிரில் ஊற வைத்து அதனை முகத்தின் மீது ஒட்டி 15 அல்லது 20 நிமிடங்கள் வைத்திருந்தால் தோல் குளிர்ச்சி அடையும். முகத்தில் அதிகமாக படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை நீக்க நாட்டு மருந்துக் கடைகளில் விற்கும் கற்பூரத் தைலத்தை தடவி ஊற வைத்து முகத்தைக் கழுவி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

கோடை காலத்தில் வெயிலில் சுற்றுவதால் கழுத்து, கால் பகுதிகள் கருப்பாகும். இதனைத் தவிர்க்க பீர்க்கங்காய் கூட்டை வாங்கி குளிக்கும்போது கருப்பான இடங்களில் மட்டும் பீர்க்கங்காய் கூட்டினை வைத்து சோப்பு போட்டு தேய்த்து குளிக்கலாம். தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்பட்டை நிறத்தில் முடி வளர்கிறது. மேலும் முடி உதிர்வதற்கும் காரணமாகிறது.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும். முகம் வட்ட நிலவாக மின்னும். 

No comments:

Post a Comment