Wednesday 13 November 2013

சமையலறை‌க் கு‌‌றி‌ப்புக‌ள்!

‌மீ‌ன் வா‌ங்‌கி சு‌த்த‌ம் செ‌ய்த பா‌த்‌திர‌த்‌தி‌ல் அத‌ன் வாடை போகாம‌ல் இரு‌‌ந்தா‌ல், ‌சீய‌க்கா‌ய் ம‌ற்று‌ம் பு‌ளி சே‌ர்‌த்து தே‌ய்‌த்து ‌விடு‌ங்க‌ள். நா‌‌ற்ற‌ம் போயே போ‌ச்சு.

கா‌பி போ‌ட்ட ‌பி‌ன் ‌மி‌ஞ்‌சிய கா‌பி ச‌க்கையை உல‌‌ர்‌த்‌தி சமைய‌ல் பா‌த்‌திர‌ம் துல‌க்கு‌ம் ச‌பீனாவுட‌ன் சே‌ர்‌த்து பய‌ன்படு‌த்‌தினா‌ல் பா‌த்‌திர‌ங்க‌ள் பளபள‌க்கு‌ம்.

நா‌ன்‌ஸ்டி‌க் தோசை‌க்க‌ல்லை தே‌ய்‌த்து தே‌ய்‌த்து கரை‌த்து‌விட வே‌ண்டா‌ம். பய‌ன்படு‌த்‌திய ‌பி‌ன்ன‌ர் ஒரு ஈர‌த்து‌ணியா‌ல் துடை‌த்து‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் ஒரு செ‌ய்‌தி‌த்தாளா‌ல் துடை‌த்து ‌வி‌ட்டா‌ல் ‌பிசு‌பி‌சு‌ப்பு போ‌ய்‌விடு‌ம். எடு‌த்து வை‌த்து ‌விடலா‌ம்.

பிரியாணி செய்யும்போது அரிசி உடையாமல் இருக்க வேண்டுமானால், ஒரு சில துளி எலுமிச்சம் சாறை அதில் விட்டால் அரிசி உடைவது குறைந்துவிடும்.

சமையல் அறையில் வைத்திருக்கும் பருப்பு, மசாலா‌ப் பொடிக‌ளி‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌ப்பதா‌ல் பெரு‌‌ம் தொ‌ல்லை ஏ‌ற்‌படுவதை‌த் த‌வி‌ர்‌க்க 5, 6 கிராம்புகளை பூ‌ச்‌சி ‌பிடி‌க்கு‌ம் பொரு‌‌ட்க‌ள் இரு‌க்கு‌ம் ட‌ப்பா‌க்க‌ளி‌ல் போ‌ட்டு வை‌த்தா‌ல் பூச்சிகள் அண்டாது.

No comments:

Post a Comment