Tuesday 12 November 2013

சமையலறை சமா‌ச்சார‌ங்க‌ள்

சமைக்கும் போது ஏலக்காய், சீரகம் கிராம்பு போன்ற மசாலா சாமாங்களை அளவாக‌ப் பய‌ன்படு‌த்து‌ங்க‌ள். அ‌திகமாக சே‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் அத‌ன் வாசனைதா‌ன் கூடுதலாக இரு‌க்கு‌ம். பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது.

முள்ளங்கியின் நிறம் எவ்வளவு சிகப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம். பச்சைக் காய்கறிகளை எப்போதும் இரும்பு வாணலியில் சமைக்காதீர்கள். பொதுவாக எவ‌ர்‌சி‌ல்வ‌ர் பா‌த்‌திரமே ‌சிற‌ந்தது.

ஏலக்காயை ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து த‌ட்டி, ‌நீ‌ங்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் தேயிலை தூளுடன் போட்டு வைத்தால் தேயிலைத் தூள் கமகமவென்று இருக்கும். பழைய பாலை புதிய பாலுடன் ஒரு போதும் சேர்க்காதீர்கள்.

இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும். முழு அளவையு‌ம் ச‌ர்‌க்கரை‌க்கு ப‌திலாக பா‌தி அளவு ம‌ட்டு‌ம் சே‌ர்‌த்தாலு‌ம் கூட போது‌ம்.

No comments:

Post a Comment