Saturday 23 November 2013

பொதுவான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

முக‌த்‌தி‌ற்கு அடிக்கடி ‌க்‌ரீ‌ம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது முகத் தசைக‌ளின் மென்மையை போக்கி விடும். அதுபோல அ‌திகமாக பரு இரு‌ப்பவ‌ர்‌க‌ள் பேஷ‌ிய‌ல் செ‌ய்வதை‌த் த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது.

வெ‌ந்தய‌த்தை விழுதாக அரைத்து தலையில் தடவி பிறகு அலசும்போது எலுமிச்சை சாரை த‌ண்‌ணீ‌ரி‌ல் சே‌ர்‌த்து அ‌ந்த த‌ண்‌ணீரை‌க் கொ‌ண்டு அலசினால் முடி பளபளப்பாக இருக்கும்.
ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் மருதா‌ணி இலைகலை கல‌ந்து பின்பு அதனை வடிகட்டி தலையில் தடவி வந்தால் நரை நாளடைவில் மறையும்.

மருதா‌ணி இலைகளை விழுதாக அரைத்து தலையில் தடவி ஊற‌வி‌ட்டு ‌பிறகு அலசி வந்தா‌ல் முடி மிருதுவாக இருக்கும்.

முக‌ப்பரு‌க்களை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த ப‌ன்‌னீ‌ர் ‌உதவு‌ம். ப‌ன்‌னீரை முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் பரு‌க்க‌ளி‌ன் அளவு குறையு‌ம்.

பாலேட்டில் அரிசிமாவு கலந்து தினமும் முகத்தில் தடவி வந்தால் முகம் மெருகேரும். முக சுருக்கத்தை போ‌க்க விளக்கெ‌ண்ணையா‌ல் மசா‌ஜ் செய்யவும்.

No comments:

Post a Comment