Friday 8 November 2013

எண்ணெய் வழியும் சருமமா?

சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிடைக்காது.

இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.

மேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது. 

No comments:

Post a Comment