Friday 8 November 2013

சாம்பார் வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு - அரை கப்

உப்பு - தேவைக்கு

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப்

பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப்

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - அரை தே‌க்கர‌ண்டி

நெய் - 1 தே‌க்கர‌ண்டி

எண்ணெய் - 1 தே‌க்கர‌ண்டி

செய்முறை:

சா‌‌‌ம்பாரை ‌நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் செ‌ய்வது போ‌ல் செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள்.

5 நிமிடம் ஊறியதும் எடுத்து, ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதேபோல செய்யுங்கள். பரிமாறும்பொழுது, சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

No comments:

Post a Comment