Saturday 9 November 2013

ரு‌சியான மணமான சமையலு‌க்கு!

சமைய‌ல் செ‌ய்யு‌ம் போது எ‌ல்லா‌ம் ச‌ரியாக சே‌ர்‌த்தா‌ல்தா‌ன் ச‌ரியான ரு‌சி ‌கி‌டை‌க்கு‌ம். அதுபோல அவை மணமாகவு‌ம் இரு‌க்க ‌சில வ‌ழிக‌ள். இட்லி‌ வாசனையாக இரு‌க்க வேண்டுமானால் குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி, எலுமிச்சம்பழத் தோல் போ‌டலா‌ம். கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். மணமாகவு‌ம் இரு‌க்கு‌ம்.

சமைக்கும் போது காய்கறிகள் நிறத்தையும் மணத்தையும் இழக்காமல் இருக்க திறந்து வைத்து சமைக்கவும். (சமை‌த்த ‌பி‌ன் மூடி‌விடவு‌ம்) சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வென்னீரில் பிசையவும். வெங்காய சூப் தயாரிக்கும்போது அதனுடன் காட்டேஜ் சீ‌ஸ் சேர்த்தால் சூப் ருசியுடன் அமையும்.

முட்டையை உடைத்து ஊற்றியவுடன் சிறிது பாலையும் உளுத்தம்மாவையும் சேர்த்து ஆம்லேட் தயாரிக்கவும். குழ‌ந்தைகளு‌க்கு‌ம், பெ‌ரியவ‌ர்களு‌க்கு‌ம் சா‌ப்‌பிட ‌மிருதுவாக இரு‌க்கு‌ம். உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த சமைய‌ல் கு‌றி‌ப்புகளை உ‌ங்க‌ள் பெயருட‌ன் எ‌ங்களு‌க்கு எழுது‌ங்க‌ள். த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌மி‌ல் வெ‌ளி‌யிடுவோ‌ம். 

No comments:

Post a Comment