Saturday 9 November 2013

பனிக்காலங்களில் உதடுகளைப் பராமரிக்க...

2 தேக்கரண்டி ரவையுடன் 1 ஸ்பூன் தேனைக் கலந்து உதடுகளில் மசாஜ் செய்தால், உதடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் நீங்கும். நல்லெண்ணெயை வெதுவெதுப்பான சூ‌ட்டி‌ல் உதடுகளில் தடவலா‌ம். பனிக்காலத்தின் போது போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்.

இளஞ்சூடான வெண்ணெயை பருத்தியிலான மெல்லிய துணியினால் நனைத்து உதடுகளி‌ன் மேல் வைத்து 20 நிமிடங்களுக்கு பிறகு எடுக்கவும். இதை வாரத்தில் இரு முறை செய்யலாம். உடலில் வைட்டமின் பி குறைந்தால் கூட வெடிப்புகள் ஏற்படலாம். அதனால் பால், முட்டை, இறைச்சி, மீன், வாழைப்பழம், கீரை, உருளைக்கிழங்கு, அத்தி‌ப்பழம், பாலாடைக் கட்டி, தயிர் போன்ற வைட்டமின் பி உள்ள உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

ஒரு துண்டு பப்பாளியை விழுதுபோல் அரைத்து, அவற்றை உதடுகள் மற்றும் உதடுகளை சுற்றியுள்ள பகுதியில் தடவவும். 10 முதல் 15 நிமிடம் வரை ஊறிய பிறகு தண்ணீரால் கழுவவும்.. உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு அதிகமான வலி இருந்தால், இரவு தூங்குவதற்கு முன்பு சிறிதளவு நெய் அல்லது வெண்ணெயை தடவி படுத்துவிட்டு, காலையில் தண்ணீரால் கழுவினால், வெடிப்புகள் நீங்கும்

No comments:

Post a Comment