Saturday 9 November 2013

கோவை‌க்கா‌ய் ச‌ட்‌னி

தேவையானவை:

கோவை‌க்கா‌ய் - 100 ‌கிரா‌ம்

வெ‌ங்காய‌ம் - 1

த‌க்கா‌ளி - 1

கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் - 3

பு‌ளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு

உ‌ப்பு, எ‌ண்ணெ‌ய், க‌றிவே‌ப்‌பிலை - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

கோவை‌க் காயை ‌வி‌ல்லை ‌வி‌ல்லைகளாக நறு‌க்கவு‌ம். த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌த்தை பெ‌ரிய து‌ண்டுகளாக நறு‌க்கவு‌ம்.

ஒரு வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்த ‌மிளகாயை‌ப் போ‌ட்டு வறு‌த்து ‌மி‌க்‌ஸி ஜா‌‌ரி‌ல் போ‌ட்டு‌க் கொ‌ள்ளவு‌ம்.

‌பி‌ன்ன‌ர் அதே வாண‌லி‌யி‌ல் த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌த்‌தை‌ப் போ‌ட்டு வத‌க்‌கி ஜா‌ரி‌ல் போ‌ட்டது‌ம், நறு‌க்‌கிய கோவை‌க்காயை‌ப் போ‌ட்டு வத‌க்‌கி ஜா‌ரி‌ல் போடவு‌ம்.

‌பி‌ன்ன‌ர் ‌மி‌க்‌சி ஜா‌ரி‌ல் பு‌ளி, உ‌ப்பு, ‌சி‌றிது க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு அரை‌க்கவு‌ம்.

பொதுவாக த‌ண்‌‌ணீ‌ர் ‌விட வே‌ண்டா‌ம், கோவை‌க்கா‌யி‌ல் உ‌ள்ள ‌நீரே ச‌ட்‌னி‌க்கு ச‌ரியாக இரு‌க்கு‌ம். ந‌ன்கு அரை‌ந்தது‌ம் எடு‌த்த‌ப் ப‌ரிமாறலா‌ம். 

No comments:

Post a Comment