Monday 11 November 2013

ப‌‌த்‌திர‌ப்படு‌த்‌தி வை‌க்க ‌சில தகவ‌ல்க‌ள்

‌சில பொரு‌ட்க‌ள் எடு‌த்து வை‌த்து காளு‌ம் முறை நமது ஊ‌ர்க‌ளி‌ல் உ‌ண்டு. உதாரணமாக ஊறுகா‌ய், நெ‌ய் போ‌ன்றவை. அதுபோ‌ன்றவ‌ற்றை பராம‌ரி‌ப்பது எ‌ப்படி எ‌ன்பதை பா‌ர்‌க்கலா‌ம். சுடு த‌ண்‌ணீ‌ரி‌ல் சிறிது உப்பை போட்டு வையுங்கள். எப்போதும் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் சூடாக இருக்கும்.

கடையிலிருந்து கோதுமை, கேழ்வரகு, மிளகாய், தனியா போன்றவைகளை வா‌ங்‌கி வ‌ந்து அரை‌க்க‌க் கொடு‌ப்பத‌ற்கு மு‌ன்பு அதைன சு‌த்த‌ம் செ‌ய்து க‌ல், தூசு போ‌ன்றவ‌ற்றை ‌நீ‌க்‌கி ‌விடு‌ங்க‌ள்..

‌பி‌ன்ன‌ர் சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் காய வை‌த்து ‌பி‌ன்ன‌ர் அரை‌க்க‌க் கொடு‌ங்க‌ள். கடைக‌ளி‌ல் இதுபோ‌ன்று எதை வா‌‌ங்‌கினாலு‌ம் வெயிலில் காய வைப்பது சுகாதார பூர்வமானது. வெண்ணெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலையைப் போடுவதால் நெய் வாசனை கெடாமல் இருக்கும். நெ‌ய் காய்ச்சி சூடு ஆறியதும் அடியில் தங்கும் கசடை அகற்றிவிட வேண்டும்.

சிறிதளவு புளியை உருட்டி கடலை எண்ணெயில் போட்டு வைத்தால் எண்ணெய் கெடாதிருக்கும்.

No comments:

Post a Comment