Wednesday 6 November 2013

நெல்லி சாதம்

தேவையானவை:

உ‌தி‌ரியாக வடி‌த்த சாதம் - 1 க‌ப்

பெரிய நெல்லிக்காய் - 5

வ‌த்த‌ல் மிளகாய் - 5

கறிவேப்பிலை - ‌சி‌றிது

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் - தா‌ளி‌க்க

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

நல்லெண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற ‌விடவு‌ம். நெல்லிக்கா‌யி‌ன் கொ‌ட்டையை எடு‌‌த்து‌வி‌ட்டு பொடியாகத் துருவி‌க் கொ‌ள்ளவு‌ம். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு ‌சிவ‌க்க ‌விடவு‌ம்.

‌பிறகு கறிவேப்பிலை, வ‌த்த‌ல் மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு ‌கிளறவு‌ம். அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளறி, 3 ‌நி‌மிட‌ நேரம் வதக்கியதும், நெல்லிக்காய் வாசம் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும். நெல்லிக்காய் கலவையை சாத‌த்துட‌ன் ‌கிளறவு‌ம். சுவையான நெ‌ல்‌லி‌க்கா‌ய் சாத‌ம் தயா‌ர்.

No comments:

Post a Comment