Saturday, 28 December 2013

சர்க்கரை டப்பாவில் எறும்பா

சர்க்கரை டப்பாவை எ‌ங்கு வை‌த்தாலு‌ம் தேடி‌க் கொ‌ண்டு வ‌ந்து ‌விடு‌கிறதா எறு‌ம்புக‌ள். நாலஞ்சு பூண்டுப் பல்லை ச‌ர்‌க்கரை ட‌ப்பா‌வி‌ல் போட்டுவைத்துப் பாருங்கள். எறும்புகள் ஓடியேப் போய்விடும்.

பூ‌ண்டை‌ப் போ‌ட்டு வை‌த்தா‌ல் வாடை வரு‌கிறது எ‌ன்று வரு‌த்த‌ப்ப‌ட்டா‌ல், அ‌தி‌ல் ‌சில ‌கிரா‌ம்புகளை‌ப் போ‌ட்டு வை‌யு‌ங்க‌ள். வாசனையாகவு‌ம் இரு‌க்கு‌ம்.

உருளைக் கிழங்கை தோல் சீவி ஒரே அளவில் கட் பண்ணி. லேசான வெ‌ந்நீரில் கொஞ்சம் உப்பை போட்டு அதில் கிழங்குத் துண்டுகளை 3 நிமிஷம் ஊற வை‌த்து ‌பிறகு ‌நீரை வடி‌த்து‌வி‌ட்டு வறுத்துப் பாருங்க‌ள்.

‌மிகவு‌ம் மொறுமொறு‌ப்பான உருளை‌க் ‌கிழ‌ங்கு ‌‌சி‌ப்‌ஸ் தயாரா‌கி‌விடு‌ம்.

கோடை‌க் கால‌த்‌தி‌ல் அ‌வ்வ‌ப்போது ‌நீ‌ர்‌த்த‌ன்மை கொ‌ண்ட கா‌ய்க‌றிகளை சால‌ட்டாக செ‌ய்து கொடு‌ப்பது ந‌ல்லது.

No comments:

Post a Comment