Thursday 5 December 2013

சாத‌ம் வடி‌ப்ப‌தி‌ல் ‌சி‌க்கன‌ம்

சாத‌ம் வடி‌ப்ப‌தி‌ல் எ‌ன்ன‌ ‌சி‌க்கன‌ம் செ‌ய்ய முடி‌யு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌சி‌ந்‌தி‌க்கலா‌ம். ஆனா‌ல் சாத‌ம் வடி‌‌ப்பத‌ற்கு‌த்தா‌ன் அ‌திக நேர‌ம் நா‌ம் எ‌‌ரிவாயுவை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌க்குமே‌த் தெ‌ரியு‌ம். இ‌ந்த ‌நிலை‌யி‌ல், எ‌ரிவாயு‌ச் ‌சி‌‌க்கன‌த்‌தி‌ற்காக நா‌ம் செ‌ய்ய‌க் கூடிய ‌சில ‌சி‌க்கன நடவடி‌க்கைக‌ளி‌ல் இதையு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

பொதுவாக கு‌க்க‌ரி‌ல் சாத‌ம் வடி‌ப்பது ‌மிகவு‌‌ம் ந‌ல்ல முறை‌. இ‌தி‌ல் பா‌தி அளவு‌ற்கு எ‌ரிவாயு ‌மி‌ச்ச‌ப்படு‌கிறது. ஆனா‌ல் ‌சிலரு‌க்கு கு‌க்க‌ரி‌ல் வை‌த்த சாத‌ம் ‌பிடி‌க்காது. எனவே கு‌ண்டா‌‌னி‌ல் வடி‌த்து சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். அதாவது ஒரு கு‌ண்டா‌னை வை‌த்து அ‌தி‌ல் சாத‌ம் வேகு‌ம் வரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து அதனை வடி‌ப்பதை ‌விட, பா‌தி சாத‌ம் வெ‌ந்தது‌ம், கு‌ண்டானை இற‌க்‌கி மூடி வை‌த்து ‌விடு‌ங்க‌ள். அ‌ந்த அன‌லிலேயே ‌மீ‌தி சாதமு‌ம் வெ‌ந்து ‌விடு‌‌ம். ‌பிறகு வ‌டி‌த்து ‌விடு‌ங்க‌ள்.

இ‌ந்த முறை‌யி‌ல் சாத‌ம் வடி‌த்தா‌ல் அ‌திக த‌ண்‌ணீ‌ர் இரு‌க்க வே‌ண்டு‌ம். த‌ண்‌ணீ‌ர் குறை‌வாக இரு‌க்குமானா‌ல் சா‌ப்பாடு‌க்கு‌ள் த‌ண்‌ணீ‌ர் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்ளலா‌ம். எனவே, தாராளமாக கு‌ண்டா‌ன் வை‌த்து சாத‌ம் வடி‌க்கு‌ம் போது இ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி சாத‌ம் வடி‌ப்பதா‌ல் எ‌ரிவாயு ‌சி‌க்கனமாகு‌ம்.

No comments:

Post a Comment