Thursday, 2 January 2014

தோசை‌யிலு‌ம் புதுமை புகு‌த்தலா‌ம்

குழ‌ந்தைகளு‌க்கு பொதுவாக தோசை எ‌ன்றா‌ல் ‌விரு‌ம்‌ப‌ம்தா‌ன். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் தோசை ம‌ட்டு‌ம் சு‌ட்டு‌க் கொடு‌க்கு‌ம் அ‌ம்மா‌க்க‌ள் ‌மீது வெறு‌ப்பு வருவது‌ம் இய‌ற்கைதா‌ன்.

உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு‌ம் ‌பிடி‌த்த வகை‌யிலு‌ம், அவ‌ர்களு‌க்கு ஒரு ச‌த்தான உணவை அ‌ளி‌‌ப்பது எ‌ன்ற வகை‌யிலு‌ம் தோசை சுட வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் மு‌ட்டை தோசை தா‌ன் முத‌லிட‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

தோசை‌யி‌ல் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ‌பிடி‌த்த சுவைகளை‌த் த‌னி‌த்த‌னியாக சே‌ர்‌க்கலா‌ம். வெறு‌ம் ச‌ர்‌க்கரை வை‌த்து குழ‌ந்தைகளு‌க்கு ஊ‌ட்டுவதாக இரு‌ந்தா‌ல், தோசை சுடு‌ம் போது அத‌ன் மேலேயே ச‌ர்‌க்கரையை‌த் தூ‌வி‌வி‌ட்டா‌ல் தோசை மாவுட‌ன் ச‌ர்‌க்கரை‌க் கல‌ந்து சுவை கூடு‌ம்.

தே‌ங்கா‌ய்‌த் துருவலுட‌ன் ச‌ர்‌க்கரை‌க் கல‌ந்து தோசை‌‌யி‌ன் ‌மீது தூ‌‌வியு‌ம், வெறு‌ம் துருவலை ம‌ட்டு‌ம் தூ‌வியு‌ம் தோசை சுடலா‌ம். ‌வீ‌ட்டி‌ல் செ‌ய்து வை‌த்‌திரு‌க்கு‌ம் ‌மிளகா‌ய்‌ப் பொடியை தோசை ‌வா‌ர்‌த்தது‌ம் அத‌ன் ‌மீது தூ‌வி எடு‌க்கலா‌ம். இதுதா‌ன் கார‌ப்பொடி தோசையாகு‌ம்.

No comments:

Post a Comment