பொதுவாக இட்லி மாவு என்றால் அதில் இட்லி, தோசை மட்டும்தான் செய்வோம். ஆனால், இட்லி மாவைக் கொண்டு பல்வேறு சுவையான டிபன்களை செய்து அசத்தலாம். வெறும் வெள்ளை இட்லியை எப்படித்தான் சாப்பிடுவது என்று சலித்துக் கொள்ளும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், நிறப்பொடிகளை அதாவது கேசரிப் பொடிகளை வாங்கி வந்து மாவில் கலந்து வண்ண வண்ண இட்லிகளை ஊற்றிக் கொடுக்கலாம்.
அதில்லாமல், பருப்பு வகைகளை தாளித்துப் போட்டு, வெறும் தேங்காயை வதக்கிப் போட்டு, காய்கறிகளை பொடியாகத் துருவிப் போட்டு, உலர்ந்த பழங்களை, உலர்ந்த தானியங்கள் அதாவது முந்திரி, பிஸ்தா போன்றவற்றை ஒன்றிரண்டாக அரைத்துப் போட்டு இட்லி சுடலாம்.
மாவில் வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் அரைத்து ஊற்றி சுவையான இட்லி செய்யலாம். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணையில் பொன் வறுவலாக வறுத்து பிறகு மாவில் கலந்து அதனை இட்லி சுட்டால் ஒன்றுக்கு இரண்டாக சாப்பிடுவார்கள்.

No comments:
Post a Comment