Sunday 23 February 2014

அரிசிமாவு உப்புமா

தேவையானவை: 

அரிசி மாவு - 150 கிராம்
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 3
எண்ணெய் - 50 மி.லிட்டர்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செ‌ய்முறை

அரிசி மாவில் த‌ண்‌ணீ‌ர் ஊற்றி நன்றாகக் கிளறி அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். வெங்காயத்தைத் தோலுரித்து அதையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகையும் உளுந்தம் பருப்பையும் போட்டுத் தாளித்துக் கொண்டு நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்குங்கள்.

அவை வதங்கியதும் அரிசி மாவைக் கொட்டி உப்பையும் போட்டுக் கிளறுங்கள்.  அரிசி மாவு வெந்ததும் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

1 comment:

  1. சுலபமாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய சிற்றுண்டி.

    ReplyDelete