Tuesday, 25 February 2014

பசும் மஞ்சளின் மகத்துவம்

பசும் மஞ்சள் நல்ல மணத்தைத் தரும். முகமெல்லாம் மஞ்சளாக ஒட்டிக் கொள்ளாது. அதனால் எல்லா வயதினரும் எந்த வகை சருமத்தினரும் உபயோகிக்க உகந்தது.

பசும் மஞ்சளைக் அதன் இலையோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அதோடு பாசிப் பயறு மாவைக் கலந்து பசைப் போல குழைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை தினமும் பூசிக் குளித்தால் தோல் சுருக்கத்தை கிட்டே நெருங்க விடாமல் இளமையை தக்க வைக்கலாம்.

பசு‌ம் ம‌ஞ்ச‌ளி‌ன் மு‌க்‌கியமான குணமே பு‌த்துண‌ர்‌ச்‌சிதா‌ன். பசு‌ம் ம‌ஞ்சளை அரை‌த்து உட‌லி‌ல் தட‌வி‌‌க் கு‌ளி‌த்தா‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌பிற‌க்கு‌ம்.

பசு‌ம் ம‌‌ஞ்ச‌ள் ந‌ம்மூ‌ர்க‌ளி‌‌ல் ‌தினமு‌ம் ‌கிடை‌க்காதது ம‌ட்டுமே பெ‌ரிய குறை. ஏதேனு‌ம் ‌விசேஷ நா‌ட்க‌ளி‌ல் ம‌‌ட்டுமே ‌கிடை‌ப்பதுதா‌‌ன் ‌பிர‌ச்‌சினை.

No comments:

Post a Comment