Friday 28 March 2014

தக்காளி தொக்கு

தேவையானவை: 

தக்காளி - 8
வெங்காயம் - 5
மிளகாய்த் தூள் - 2 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
புளி - கோலி உருண்டையளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.

இதில் தக்காளி, அரிந்த பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உ‌ப்பு சேர்த்து வதக்குங்கள்.

இந்தக் கலவை நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் சமயம், புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றுங்கள்.

ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

No comments:

Post a Comment