Saturday 7 May 2016

சாமை - தினை குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்:-
  •  சாமை அரிசி & 100 கிராம்
  • திணை & 100 கிராம்
  • இட்லி அரிசி & 100 கிராம்
  • உளுத்தம் பருப்பு & 50 கிராம்
  • வெந்தயம் & 1/4 தேக்கரண்டி
  • வெங்காயம் & 1
  • கேரட் தேவையான அளவு
  • கடுகு, உப்பு தேவையான அளவு
  • கொத்த மல்லி தேவையான அளவு
  • கறிவேப்பிலை தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:
  • திணை, சாமை, இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து ஊற வைக்கவும்.
  • பிறகு உப்பு சேர்த்து கிரைண்டர் / மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். 
  • அரைத்த மாவை 6&7மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பிறகு தீஞ்சட்டியில், கடுகு, உளுத்தம் பருப்பு, துருவிய கேரட், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் குழிப்பணியார சட்டியில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். 
  • இத்துடன் தக்காளி, வெங்காய சட்னியும் சேர்த்து சாப்பிடலாம்.


Recipe send By
Mrs.Lakshmi Ramana
Kailash Colony, Anna Nagar West Extn., Chennai – 600 101


No comments:

Post a Comment