Friday, 21 March 2014

கடு‌கி‌ன் மரு‌த்துவ‌த் த‌ன்மை

கடுகு ‌சிறு‌த்தாலு‌ம் கார‌ம் குறையாது எ‌ன்பது பழமொ‌ழி. இ‌த்தகைய ‌சிற‌ப்பு ‌மி‌க்க கடு‌கி‌‌ற்கு ஏராளமான மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம். அதாவது, நா‌ம் சமை‌க்கு‌ம் சமைய‌‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌‌தி‌ற்கு உதவு‌கிறது.

தா‌ளி‌ப்ப‌தி‌ல் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கே கடுகுதா‌ன். கடுகு வெடி‌க்கு‌ம் போது அ‌தி‌ல் உ‌ள்ள கார‌ம் எ‌ண்ணெ‌யி‌ல் கல‌ந்து, அதனை உ‌‌ண‌‌வி‌ல் சே‌ர்‌க்‌கு‌ம் போது உணவு முழுவது‌ம் எ‌ளிதாக ‌ஜீர‌ணி‌க்க‌க் கூடிய ‌ஏ‌ற்பா‌ட்டை கடு‌கி‌ன் கார‌ம் செ‌ய்து ‌விடு‌கிறது.

தா‌ளி‌க்காம‌ல் எ‌ந்த உணவு‌ப் பொருளு‌ம் முழுமையடையாத வகை‌யி‌ல் நமது உணவு முறை அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதே கடு‌கி‌ன் மக‌த்துவ‌த்தை உண‌ர்‌ந்துதா‌ன்.

கடுகுட‌ன் ‌சீரக‌மு‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து‌ப் போ‌ட்டு தா‌ளி‌ப்பது இ‌ன்னு‌ம் ‌சி‌ற‌ந்தது ஆகு‌ம்.

No comments:

Post a Comment