Thursday, 20 March 2014

தக்காளி சாதம்

தேவையானவை: 

தக்காளி - 1/4 கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
பூண்டு - 8 பல், இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய்த் தூள் - 2 தே‌க்கர‌ண்டி
தனியா தூள் - 3 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
கடுகு - 1/2 தே‌க்கர‌ண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வடித்த சாதம் - 4 கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக் கொள்ளுங்கள்.  இஞ்சி, பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.

இதில் தக்காளி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள்.  பிறகு இந்தக் கலவையில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கொதிக்க விடுங்கள்.

எண்ணெய் மிதந்து வரும் சமயம் வடித்த சாதத்தைப் போட்டு லேசாகக் கிளறி இறக்குங்கள். தயாரான சாதத்தின் மேல் கொத்துமல்லித் தழையை தூவி சூடாகப் பரிமாறுங்கள்.

No comments:

Post a Comment