Monday, 24 March 2014

பு‌ளிசாத‌த்‌தி‌ன் ம‌கிமை

நா‌ம் எ‌ங்காவது பயண‌ம் செ‌ன்றாலு‌ம் ச‌ரி, தூர‌ப் பயண‌ம் செ‌ன்றாலு‌ம் ச‌ரி, ‌வீ‌ட்டி‌ல் செ‌ய்து எடு‌த்து‌ச் செ‌ல்வது பு‌ளிசாத‌ம்தா‌ன். இ‌ந்த பு‌ளிசாத‌த்‌‌‌தி‌ற்கு பல ம‌கிமை உ‌ண்டு.

ந‌ல்ல முறை‌யி‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட பு‌ளி சாத‌ம் இர‌ண்டு நா‌ட்களு‌க்கு‌க் கூட வரு‌ம். இத‌ற்கு உருளை‌க் ‌கிழ‌ங்கு வறுவ‌ல் ச‌ரியான இணை உணவாகு‌ம்.

பு‌ளி‌ச்சோறு ப‌ற்‌றி ந‌ம்முடைய இல‌க்‌கிய‌த்‌தி‌ல் அக‌ப்பாட‌லிலேயே‌க் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது. அதாவது த‌ன்னுடைய காதலனான தலைவ‌ன் ப‌சியாற, தலை‌வி பு‌‌ளி‌ச்சோறு கொடு‌த்ததாக‌க் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ன்றை‌க்கு நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் பு‌ளியோதரை வைணவ கோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌பிரசாதமாக கொடு‌க்க‌ப்படு‌கிறது.

உணவு ப‌ற்‌றி ஆரா‌ய்‌ச்‌சி செ‌ய்யு‌ம் வ‌ல்லுந‌ர்க‌ள் இ‌ந்த பு‌ளி சாத‌ம் க‌ர்நாடகா‌வி‌ல் தோ‌ன்‌றியதாக‌க் கூறு‌கி‌ன்றன‌ர்.

No comments:

Post a Comment