Monday, 24 March 2014

ந‌ல்ல ‌விஷய‌ங்க‌ள்

உங்கள் புருவங்களை குளித்த பிறகு ஷேப் செய்யவும். இல்லையென்றால் வெந்நீரில் நனைத்த துணியை புருவத்தின் மேல் சில நிமிடங்கள் வைக்கவும். இது வலியை குறைத்து புருவத்திலுள்ள முடிகளை எடுப்பதை சுலபமாக்கும்.

காதில் போடும் கம்மல், மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.

கூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.

வெய்யிலில் கருத்த சருமத்தை வெண்மையாக்க ப்ளீச்‌சி‌ங் சிறந்தது. இதோ வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ப்ளீச். பன்னீர், கடலை மாவு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து உபயோகிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் காலை எழுந்தவுடன் 1 லிட்டர் நீர் பருகுங்கள். நாள் முழுவதும் நிறைய நீர் அருந்துங்கள். இதன் மூலம் உடலில் ஏற்படும் கெட்ட அமிலங்கள் வெளியேற வாய்ப்புண்டு. 

No comments:

Post a Comment