Tuesday, 4 March 2014

பால் குழம்பு

தேவையானவை: 

தேங்காய் - 1
உருளைக்கிழங்கு - 4
கத்தரிக்காய் - 4, பீர்க்கங்காய் - 1
எலு‌மி‌ச்ச‌ம் பழ‌ம் - பா‌தி
பூண்டு - 1, மிளகாய் - 4
த‌னியா, சீரகம் - 2 தேக்கரண்டி
சோ‌ம்பு, ப‌ட்டை, ‌கிரா‌ம், ஏல‌க்கா‌ய், எ‌ண்ணெ‌ய் - தா‌ளி‌க்க

செ‌ய்யு‌ம் முறை 

‌மிளகா‌ய், த‌னியா, ‌சீரக‌ம் ஆ‌கியவ‌ற்றை மைய அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.  தேங்காயைத் துருவி முதல் பால் கெட்டியாக எடு‌த்து த‌னியாக வை‌க்கவு‌ம்.

இரண்டாவது பாலில் அரைத்த மசாலா ‌விழுதை கலக்கவும். காய்கறிகளை ‌சி‌றிதாக நறு‌க்‌கி மசாலா கலந்த தேங்காய்ப் பாலில் போ‌ட்டு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

வெந்தவுடன் கெட்டிப் பாலையும் சேர்த்து ஊற்றி மஞ்சத்தூள் போடவும்.

வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி சோ‌ம்பு, பட்டை, கிராம்பு, ஏல‌க்கா‌ய் போட்டுத் தாளித்துக் குழ‌ம்‌பி‌ல் கொட்டவும்.  எலுமிச்சம்பழம் பாதி மட்டும் பிழிந்து இறக்கவும்.

No comments:

Post a Comment