Wednesday, 26 March 2014

க‌றிவே‌ப்‌பிலை‌ப் பொடி

க‌றிவே‌ப்‌பிலையை ந‌ன்கு த‌ண்‌ணீ‌ரி‌ல் கழு‌வி, அதனை வெறு‌ம் கடா‌யி‌ல் போ‌ட்டு சூடே‌ற்‌றினா‌ல் த‌ண்‌ணீ‌ர் பத‌ம் போ‌ய்‌விடு‌ம். அதனுட‌ன் ‌சி‌றிது உளு‌ந்து‌ம் பரு‌ப்பு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், பெரு‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை வை‌‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு பொடி செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள். இதனை சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து‌ம் சா‌ப்‌பிடலா‌ம், இ‌ட்‌லி‌க்கு‌ம் தொ‌ட்டு‌க் கொ‌ண்டு‌ம் சா‌ப்‌பிடலா‌ம். அவசர‌த்‌தி‌ற்கு‌ம் உத‌வு‌ம். ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌‌ற்கு‌ம் ‌சிற‌ந்தது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.

தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment