Tuesday, 25 March 2014

மாதுளம் சாதம்

தேவையானவை: 

பச்சரிசி 1 கப், பச்சை மிளகாய் 3
சற்று புளிப்பான மாதுளம் பழம் 1
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு
கடுகு கால் டீஸ்பூன்
வறுத்த முந்திரிப் பருப்பு 8
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு அரை டீஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை: 

அரிசியைச் சுத்தப்படுத்தி சற்று உதிரியாக வடித்துக் கொள்ளவும்.  சாதத்தை ஒரு தாம்பாளத்தில் கொட்டி சிறிது எண்ணெய் பிசறி ஆற விடவும்.

மாதுளம் பழத்தை உரித்து சாறு பிழந்து கொள்ளவும்.  எண்ணெயை சூடாக்கி அதில் கடுக, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து மாதுளம் பழச்சாற்றில் கொட்டவும்.

இக்கலவையை லேசாகக் கொதிக்கவிட்டு உப்பு சேர்த்து சாதத்தில் கொட்டி நன்கு கலக்கவும்.  வறுத்த முந்திரி பருப்பால் அலங்கரிக்கவும்.

அ‌வ்வளவுதா‌ன் மாதுள‌ம் சாத‌ம் தயா‌ர்.

No comments:

Post a Comment