Sunday, 16 March 2014

சரும‌த்‌தி‌ற்கான கு‌றி‌ப்புக‌ள்

வெள்ளரிப் பிஞ்சு சாற்றை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சற்று சூடான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும்.

இந்த சாற்றில் பஞ்சை நனைத்து இரு கண்களிலும் வைத்து, ஒரு துணியால் கண்களை கட்டிக் கொண்டு 15 நிமிடங்கள் வைத்திருந்தால், கண்களுக்குக் கீழே ஏற்படும் கரு வளையங்கள் நீங்கும்.

எலுமிச்சம் பழச் சாற்றை தேனுடன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தை வெண்மையாக்கும். ப்ளீச் செய்து கொள்வதற்கு பதிலாக இதை உபயோகித்துப் பாருங்கள்.

எலுமிச்சம் பழச் சாற்றுடன் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தடவினால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கவும்.

மோர் குடிப்பதற்கு மட்டுமல்ல, குளிப்பதற்கு முன்பு முகத்திலும் உடம்பிலும் தடவி பிறகு குளித்தால், உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

No comments:

Post a Comment