Sunday, 9 March 2014

பொடி இட்லி

தேவையானவை: 

இட்லி மாவு - 2 கப்
இட்லி மிளகாய்ப் பொடி - 2 தே‌க்கர‌ண்டி
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) - ஒரு தே‌க்கர‌ண்டி
கடுகு - அரை தே‌க்கர‌ண்டி
சீரகம் - அரை தே‌க்கர‌ண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி

செய்முறை :

இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்து, அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழம் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

ருசியான பொடி இட்லி தயார்.

No comments:

Post a Comment