Friday 22 November 2013

உடலு‌க்கு உட‌ற்ப‌யி‌ற்‌சி அவ‌சிய‌ம்

வாரத்தில் ஐந்து நாட்களாவது ‌தினமு‌ம் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகு‌ம். இது, குளுகோமா கோளாறு உண்டாவதைத் தடுக்கிறது.

தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஐந்து நிமிடம் கண்களுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது. கண்களை இடது - வலது புறமாகவும், மேலே - கீழேயும் அசைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். இப்படி செய்வதால் குளுகோமா கோளாறு வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

50 வயதைத் தாண்டியவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் கூடுதலாக இருக்கின்றவர்கள் ஒ‌வ்வொரு மாதமும் பரிசோதனை செய்து மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம்.

சூரிய வெளிச்சத்தில் இருந்து கண்களுக்கு உண்டாகிற வறட்சியால் கண்களைப் பாதுகாப்பதற்காக சன் க்ளாஸ் அணிந்து கொள்ளலாம். நீச்சல் செய்யும் போது கண்ணாடி அணிய வேண்டும். ஏனெனில், இது குளோரினில் இருந்து கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.

No comments:

Post a Comment