Friday 22 November 2013

பால் பாயாசம் செய்யும் போது...

பால் பாயசம் செய்வதற்குப் பச்சரிசியை நன்றாகக் களைந்து, அரை மணி நேரம் ஊறவைத்துப் பிறகு, பாலில் வேக வைக்கவேண்டும். சிறிது சிறிதாகப் பாலைச் சேர்த்துக் கொண்டு வந்தால்தான், பாயசம் மணத்துடன் இருக்கும்.

தயிர் சீக்கிரம் தோய வேண்டுமா..
.

தயிர் சீக்கிரம் தோய வேண்டும் என்றால் பாலில் மோராக உறை ஊற்றினால் தயிர் சீக்கிரம் தோயும் (அ) தயிராக உறை ஊற்றினால் ஸ்பூனால் நன்கு கலக்க வேண்டும்.

நூடுல்ஸில் மசாலா சேர்க்கும்போது...

நூடுல்ஸ் எதுவாக இருந்தாலும் நூடுல்ஸை கொதி நீரில் போட்ட பிறகு மசாலாவைப் போடுவதற்குப் பதில், நீர் கொதித்ததும் முதலில் மசாலாவைப் போட்டு நன்கு கலக்கி, பின்பு நூடுல்ஸை போட, மசாலா, நூடுல்ஸ் முழுவதும் சீராக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் சுவையாக இருக்க...


சர்க்கரைப் பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க, கொஞ்சம் மில்க் மெய்ட் சேர்த்துப் பாருங்கள். அற்புதமான சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment