Friday 29 November 2013

உருளைக்கிழங்கு சூப்

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

பால் - 1/2 டம்ளர்

சோள மாவு - 1

மிளகு தூள் - அரை தே‌க்கர‌ண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையானது

எப்படி செய்வது?


உருளைக்கிழங்கை தோல் நீக்கி, வெங்காயம், உப்பு சேர்த்து வேக வை‌த்து ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

இதனுடன் சோள மாவு, பால், மிளகுத்தூள் சேர்க்கவும். தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் இந்த கலவையை ஊற்றி சூடாக்கவும்.

சூப் கெட்டியாக வரும் வரை கிளறி விடவும். பின்னர் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

No comments:

Post a Comment