Friday 29 November 2013

மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது

மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம். கீரை ருசியாக இருக்க வேண்டுமானால் கீரையை சிறிது சர்க்கரை கலந்த நீரில் ஊறவைத்து பிறகு சமைக்க வேண்டும்.

ஃகாலிபிளவர், முட்டைகோஸ் முதலியவற்றை வேக வைக்கும்போது ஒரு வித நாற்றம் வரும். அதைத் தடுக்க சிறிது எலுமிச்சம் பழச்சாறு, அல்லது ஒரு சிறிய இஞ்சித் துண்டை சேர்த்து வேகவைக்கலாம். மிக்ஸியில் இட்லி மாவு அரைக்கும் பெண்கள் அரிசி மாவு நன்றாக அரைபடவில்லை, நேரமாகிறது என்பார்கள். அவர்கள் கவலையை போக்க எளிய வழி புழுங்கள் அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் சுலபமாக அரைபடும்.

தேங்காய் பர்பி தயாரிக்கும்பொழுது சில சமயம் பதம் தவறி முருகி விடலாம். அப்படி நேரும்போது அதை பாலில் ஊற வைத்து, மீண்டும் கிளறி இறக்கும் சமயம் நெய்யில் வறுத்த கடலை மாவை சிறிது தூவி இறக்கினால், பர்பி மறுபடியும் சரியான பதத்திற்கு வந்துவிடும்.

No comments:

Post a Comment