Tuesday, 31 December 2013

உடலை தூ‌ய்மையாக வை‌‌க்கவு‌ம்

பயணம் செய்யும் போது கண்ணாடி அணிந்து கொண்டால், கண்களை தூசி, புகை போன்றவற்றில் இருந்தது பாதுகாத்துக் கொள்ளலாம்.

சூரிய வெளிச்சத்தில் இருக்கிற புற ஊதாக் கதிர்கள் கண்களில் படாமல் இருக்க, பெரிய தொப்பியை தலையில் அணிவது நல்லது.

கண்களை சில மணி நேரம் இடைவெளியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படிச் செய்வதால் கண்களுக்குப் புத்துணர்வாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் கண்களில் தூசி, அழுக்கு போன்றவை பதிந்துவிடாமல் தடுக்கின்றது.

தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு போடப்பட்டிருந்த மேக்கப்பை அழிக்கவும். கண்களைச் சுத்தப்படுத்திய பிறகே தூங்கச் செல்ல வேண்டும்.

சுத்தமான டவல் உபயோகிப்பது நல்லது. வேறொருவர் பயன்படுத்திய டவலை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்கவும். 

No comments:

Post a Comment