Tuesday, 31 December 2013

முட்டை கேக்

தேவையானவை:

முட்டை - 4

மைதா - 1 கப்

வெனிலா எசன்ஸ் - 1/2 தே‌க்கர‌ண்டி

பொடித்த சர்க்கரை - 1/2 கப்

பேக்கிங் பவுடர் - 1/2 தே‌க்கர‌ண்டி

செ‌ய்யு‌ம் முறை

முட்டைகளை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் உடை‌த்து ஊ‌ற்‌றி நுரை பொங்க கர‌ண்டியா‌ல் அடி‌க்கவு‌ம். இதில் சர்க்கரைத் தூளைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். ச‌‌ர்‌க்கரை‌க் கரையு‌ம் வரை அடி‌க்கவு‌ம்.

மாவையும், பேக்கிங் பவுடரையும் சலித்துக் கொண்டு, முட்டைக் கலவையில் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும். எசன்ஸையு‌ம் சேர்க்கவும்.

'ஒரு மைக்ரோ வேவ் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மேல் லேசாக மைதா மாவைத் தூவவும்.

இதில் கேக் கலவையை விட்டு, 7 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வைத்து, `பேக் மோட்'டில் வேகவிடவும். ஆறிய பின் கே‌க் து‌ண்டுகளை நறு‌க்கவு‌ம்.

No comments:

Post a Comment